படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு இதயதுடிப்பு அதிகரிப்பு: மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு இதயதுடிப்பு அதிகரிப்பு: மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகைக்கு இதயதுடிப்பு அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் ’நடிகையர் திலகம்’ நாக் அஸ்வின் இயக்கும் ’புராஜக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருடையை இதய துடிப்பு திடீரென அதிகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் இதய துடிப்பு சீரானதை அடுத்து, சில மணி நேரத்துக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

தீபிகா படுகோனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in