22 கோடிக்கு ஆடம்பர பங்களா கட்டிய பிரபல நட்சத்திர ஜோடி: முகம் காண்பிக்காமல் கிரஹப்பிரவேச பூஜை போட்டோ வெளியிட்டு பரபரப்பு

22 கோடிக்கு ஆடம்பர பங்களா கட்டிய பிரபல நட்சத்திர ஜோடி: முகம் காண்பிக்காமல் கிரஹப்பிரவேச பூஜை போட்டோ வெளியிட்டு பரபரப்பு

கடற்கரை நகரில் ஆடம்பர பங்களா வாங்கிய, பிரபல நட்சத்திர தம்பதி நேற்று அங்கு கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் தம்பதிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி, மும்பை அருகே உள்ள கடற்கரை நகரமான அலிபாக்கில் ஆடம்பரமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர். கிம் பீச் அருகே வாங்கப்பட்டுள்ள பங்களா, 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ரூ.22 கோடிக்கு இந்தப் பங்களாவை இந்த ஜோடி வாங்கியுள்ளது.

இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடந்தது. இதில் நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ரன்வீர் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் முகத்தைக் காண்பிக்காமல் பூஜை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஜோடி, மும்பை பாந்த்ராவில், ரூ.119 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், சமீபத்தில் வீடு வாங்கியிருந்தது. 16, 17, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து, இந்த வீடு கட்டப்படுவதாகவும், இதன் மொத்த பரப்பளவு 11,266 சதுர அடி என்றும் கூறப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in