பாலியல் வன்கொடுமை புகார்: இயக்குநர் கைது

பாலியல் வன்கொடுமை புகார்: இயக்குநர் கைது
லிஜு கிருஷ்ணா

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திரைப்பட இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிவின் பாலி நடித்து வரும் மலையாளப் படம், ’படவேட்டு’. இதை நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதிதி பாலன் நாயகியாக நடிக்கிறார். மற்றும் ஷம்மி திலகன் உள்பட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்

லிஜு கிருஷ்ணா
லிஜு கிருஷ்ணா

அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில் லிஜு கிருஷ்ணா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, காக்கநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தார். புகாரில், கடந்த 2020 டிசம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, தனது வீடு உள்பட பல்வேறு இடங்களில் வைத்து தன்னை, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த கண்ணூர் பகுதிக்கு வந்த போலீஸார், லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in