`என்னை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது'- பாதுகாப்பு கேட்கும் நடிகை அனுஷ்காவின் சகோதரர்

`என்னை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது'- பாதுகாப்பு கேட்கும் நடிகை அனுஷ்காவின் சகோதரர்
அப்பா, அம்மா, சகோதரருடன் நடிகை அனுஷ்கா

பிரபல நடிகை அனுஷ்காவின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் பாதுகாப்பு கேட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறிது காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இவர் சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர், ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவரான முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளர்.

இந்நிலையில், இவரை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

முத்தப்பா ராயின் மற்ற ஆதரவாளர்களான மன்வித் ராய், ராகேஷ் மல்லி ஆகியோருக்கும் குணரஞ்சன் ஷெட்டிக்கும் பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன்வித், ராகேஷ் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in