`எங்களுக்கு இதைச் செய்யுங்கள், உதவியாக இருக்கும்'- நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு டிடி வைத்த கோரிக்கை!

டிடி
டிடி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு டிடி வைத்த கோரிக்கை!

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை டிடி என்கிற திவ்யதர்சினி தொகுத்து வழங்கினார். விழா மேடையில் இருக்கையில் அமர்ந்திருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ள டிடி, ’நாங்கள் உடல் மற்றும் மனதளவில் வித்தியாசமானவர்கள். சமீப நாட்களில் நீங்கள் கொடுத்திருக்கக்கூடிய அன்பு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது.

அதுவே, ‘வாத்தி’ இசைவெளியீட்டு விழாவில் இந்தப் புகைப்படத்தை நான் பகிர காரணமாக இருக்கிறது. விழா நடந்து கொண்டிருக்கும்போதே நான் தேவையான குறிப்புகளை எடுக்கவும் வசதியாக இருந்தது. பலமணி நேரமாக நின்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய என்னுடைய சக தொகுப்பாளர்களுக்கும் சேர்த்தே இதை நான் பகிர்கிறேன். நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தொகுப்பாளர்களுக்கு என தனி இருக்கை அமைத்து தருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். இது பார்வையாளர்களுக்கும் நாங்கள் நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்துவது போல தோற்றமளிக்கும். ஐந்துமணி நேரம் நின்று நிகழ்ச்சியை நடத்தும் எங்களுக்கும் இது உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in