‘நான் ஒரு ராணியாக இருக்க விரும்பினேன்’ - டிடி சொன்ன டிவி பின்னணி!

‘நான் ஒரு ராணியாக இருக்க விரும்பினேன்’ - டிடி சொன்ன டிவி பின்னணி!

சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொகுப்பாளராக இருந்துவருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. திரைத் துறையில் அதிகப் படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்து ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் டிடி, சினிமாவில் அதிகம் நடிக்காதது பற்றி மனம் திறந்திருக்கிறார்.

2003-ல் டிடி 'நள தமயந்தி' படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமான டிடி, 'அரசி', 'செல்வி' ஆகிய சீரியல்களிலும் நடித்தார். பெரும்பாலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே பணியாற்றி சின்னத்திரையில் வெற்றிக்கொடி நாட்டினார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காஃபி வித் காதல்' படத்தில் டிடி நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் அதிகம் நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். “நான் தொகுப்பாளராகச் சின்னத்திரையில் பிரபலமடைய ஆரம்பித்ததற்கு பிறகு எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் வந்தன. ஆனால், என்னுடைய பலம் என நான் கருதிய தொகுப்பாளர் பணியில் எனக்கான நல்ல இடம் வேண்டும் என்று நினைத்தேன். இங்கு ஒரு குயினாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதனால், நான் அதிகம் படங்களைத் தேர்ந்தெடுக்காமல் இந்தத் துறையில் கவனம் செலுத்தினேன். இருபது வருடங்களுக்கும் மேலாக மக்கள் அந்த அன்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “சினிமாவில் பலரும் கதாநாயகிகளாக இருந்து இன்று காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், இன்று வரை மக்கள் மனதில் தொகுப்பாளராக இருக்கிறேன் என்பதே நிறைவைத் தருகிறது" என்று டிடி தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in