பெண்களை அவமானப்படுத்தியதாக புகார்... மன்னிப்பு கேட்ட டேட்டிங் ஆப் நிறுவனம்!

பெண்களை அவமானப்படுத்தியதாக புகார்... மன்னிப்பு கேட்ட டேட்டிங் ஆப் நிறுவனம்!

நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பிரபல டேட்டிங் நிறுவனமான பம்பிள் எதிர்வினைகளை சந்தித்தது. இதனையடுத்து, இந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

முன்பெல்லாம் திருமணம் என்றாலே வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்படுவது என்று இருந்தது. பின்பு, அங்கொன்றும் இங்கொன்றுமாக காதல் திருமணங்களும் நடந்தது. ஆனால், காலமாற்றத்திற்கேற்ப இப்போது பழகி பார்த்து, லிவ்வினில் வாழ்ந்து ஒத்துவந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் ஆண்- பெண் உறவு சென்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, சுச்சுவேஷன்ஷிப், ஃப்ரண்ட்ஸ் வித் ஃபெனிஃபிட்ஸ் என தங்கள் உறவுகளுக்கு புதுப்புது அர்த்தங்களும் பெயர்களும் கொடுக்கிறார்கள்.

பம்பிள் ஆப்
பம்பிள் ஆப்

இப்படி ஆண்- பெண் பழகுவதற்கு என்றே இப்போது டேட்டிங் செயலிகளும் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பம்பிள் ஆப் (Dating app Bumble). இந்த செயலி தனது விளம்பரத்திற்கான கான்செப்ட்டில் பெண்களை இழிவுப்படுத்தும்படியான கருப்பொருளைக் கொண்டிருந்ததாக எதிர்வினைகள் கிளம்பியது.

அந்த விளம்பரத்தில், ’பாலியல் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாத பெண்கள் பிரம்மச்சாரிகள். டேட்டிங் செய்வதை விட்டுவிட்டு அவர்கள் கன்னியாஸ்திரியாக போகலாம்’ என்ற ரீதியில் இருந்தது. இதுதான் பொதுவெளியில் கொதிப்படைய செய்துள்ளது.

’ரசனையற்ற விளம்பரம்’ என்றும் ’பெண்களை இந்த விளம்பரம் அவமானப்படுத்துகிறது. பாலியலில் விருப்பம் இல்லை என்றால் அது அவர்களது விருப்பம். அதைப் பொதுவில் கேலி கூத்தாக்கக் கூடாது’ என்றும் பலர் எதிர்வினையாற்றினர். டேட்டிங்கில் ஆர்வம் இல்லாதவர்களை உற்சாகப்படுத்த நகைச்சுவைக்காக செய்த விஷயம் இது என பம்பிள் கூறினாலும், தங்கள் தவறை ஒப்புக் கொண்டு இந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in