நாளை வெளியாகிறது 'தசரா' பட அப்டேட்: நானி ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை வெளியாகிறது 'தசரா' பட அப்டேட்:  நானி ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி, வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 'ஷ்யாம் சிங்கா ராய்', 'அன்டே சுந்தரானிகி' என 2 வெற்றி படங்களைக் கொடுத்துள்ள நானி, அடுத்ததாக 'தசரா' என்ற பீரியாடிக் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக் ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ளது.

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாகிறது. நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் நாளை காலை 11.11 மணிக்கு 'தசரா' படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அநேகமாக அது படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நானி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in