வெளிநாட்டு நடிகையுடன் சிவகார்த்திகேயன் நடன ஒத்திகை!

வெளிநாட்டு நடிகையுடன் சிவகார்த்திகேயன் நடன ஒத்திகை!

வெளிநாட்டு நடிகையுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடன ஒத்திகையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக் ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். தமிழ் , தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இது, வெளிநாட்டுச் சுற்றுலா பயணியான நாயகியை, ஹீரோ காதலிக்கும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. இதில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா, நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் மரியா ரியபோஷப்கா சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இருவரும் இந்தப் படத்துக்கான நடன ஒத்திகையில் பங்கேற்றபோது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி ஹீரோயின். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in