வயதானவர்களை தரக்குறைவாக ‘தாய்க்கிழவி’ என்பதா?: நடிகர் தனுஷுக்கு கண்டனம்!

வயதானவர்களை தரக்குறைவாக ‘தாய்க்கிழவி’ என்பதா?: நடிகர் தனுஷுக்கு  கண்டனம்!

தாய்க்கிழவி எனும் பாடலை் எழுதி, பாடியுள்ள நடிகர் தனுஷுக்கு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘திருச்சிற்றம்பலம்’. இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகிறது.

இதில், இடம்பெற்றுள்ள 'தாய்க்கிழவி' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை நடிகர் தனுஷ் எழுதி, பாடியுள்ளார். ‘நாட்டாமை’ படத்தில் நடிகர் பொன்னம்பலம், தாய்க்கிழவி என்பதை அடிக்கடி சொல்லியிருப்பார், அதை வைத்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர்.

NGMPC181

இந்நிலையில், இந்தப் பாடலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியிருப்பதாவது, “வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய், தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் கிழவி, தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு திருச்சிற்றம்பலம் படத்திற்காக, பாடல் எழுதி பாடி, நடிகர் தனுஷ் தவறான முன்னுதாரணமாகி இருக்கிறார்.

வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கிவிட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in