‘டாடா’ கவின் நெகிழ்ச்சி: ’என் கனவு நிறைவேறியது’

‘டாடா’ கவின்
‘டாடா’ கவின்‘டாடா’ கவின் நெகிழ்ச்சி: ’என் கனவு நிறைவேறியது’

நடிகர் கவின் ‘டாடா’ பட வெற்றியால் தன்னுடைய 12 வருட கனவு நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆனதை அடுத்து தற்போது ஓடிடி தளத்திலும் படம் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து கவின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கூறியிருப்பதாவது, ‘’டாடா’ திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்து வெற்றிப் பெற செய்திருக்கிறீர்கள்.

’டாடா’ திரைப்படம் நல்ல கதை என்பதால் நிச்சயம் திரையரங்குகளில் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். இந்த வெற்றி மூலம், என்னுடைய 12 வருட கனவும் நிறைவேறி உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல படங்களில் நடித்து, நிச்சயம் மக்களை மகிழ்விப்பேன்’ என பேசியுள்ளார் கவின்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in