அடடா... க்யூட் மம்மி நயன்தாரா... வைரலாகும் வீடியோ

அடடா... க்யூட் மம்மி நயன்தாரா... வைரலாகும் வீடியோ

திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தாலும், ஒரு தாயாக தனது கடமைகளை சரிவர செய்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தனது மகனை தாலாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வந்தாலும், தன் மகன்களுடன் நேரத்தை செலவிட தவறுவதில்லை. தற்போது நடிகை நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யூடியூப்பர் டியூடு விக்கி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா உடன் யோகிபாபுவும் நடிக்கிறார்.

இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, தன் மகனை தாலாட்டி உறங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துள்ள நயன்தாரா, தன்னுடைய மகன் உயிரை மடியில் படுக்க வைத்து, அவரை தாலாட்டி தூங்க வைக்கிறார். இதனை வீடியோ எடுத்துள்ள விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in