’எதற்கும் துணிந்தவன்’ சூர்யா
’எதற்கும் துணிந்தவன்’ சூர்யா

ஊரடங்கு ரத்து: ரிலீஸுக்கு தயாராகும் திரைப்படங்கள்

அரசு, ஊரடங்கை ரத்து செய்துள்ளதால், திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் திரையுலகினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

கரோனா தொற்றுடன் ஒமைக்ரானும் வேகமாக பரவியதால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் கூறப்பட்டன.

வீரமே வாகை சூடும், விஷால், டிம்பிள் ஹயாதி
வீரமே வாகை சூடும், விஷால், டிம்பிள் ஹயாதி

இதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த, அஜித்குமார் நடித்த ’வலிமை’, ராஜமெளலி இயக்கியுள்ள ’ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ’ராதே ஷ்யாம்’ உட்பட சில திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதற்கடுத்து, கடந்த 26-ம் தேதி வெளியாவதாக இருந்த விஷாலின் ’வீரமே வாகை சூடும்’, பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸாக இருந்த சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டன.

பொங்கல் வெளியீடு தள்ளிப்போனதால், பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதியில் இன்னும் குழப்பம் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவற்றை நேற்று ரத்து செய்துள்ளது. இதனால், திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் திரையுலகினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in