ரொட்டிக்கும் வெங்காயத்துக்கும்..!

கியூபன் திரை விழா
வித் யூ பிரெட் அண்டு ஆனியன்ஸ்
வித் யூ பிரெட் அண்டு ஆனியன்ஸ்

புரட்சி விளைந்த மண்ணின் கதைகளும் திரைப்படங்களும் வேறெப்படி இருக்க முடியும்? 1950களில் கியூபாவில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தினருக்குக் குளிர்சாதன பெட்டி என்பது மாபெரும் கனவு. சுகமான சுமையாக மாறிப்போகும் குளர்சாதன பெட்டியை சுற்றிச்சுழலும் கியூபா நாட்டு நகைச்சுவை திரைப்படம், ’வித் யூ பிரெட் அண்டு ஆனியன்ஸ்’.

இத்திரைப்படம் உட்பட முத்தான மூன்று கியூபன் திரைப்படங்கள் சென்னையில் இன்று முதல் திரையிடப்படவிருக்கிறது. சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள கியூபா தூதரகத்துடன் இணைந்து இன்று (ஜூன் 6), ஜூன் 7, 8 ஆகிய நாட்களில் கியூபன் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணிக்கு திரையிடல் தொடங்கும்.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

இன்னசன்ஸ்
இன்னசன்ஸ்
கியூபா லிபர்
கியூபா லிபர்

கியூபன் திரை விழா ஜூன், 2022

1. ’இன்னசன்ஸ்’ (Innocence) – 120 நிமிடங்கள் -ஜூன் 6, மாலை 6

2. ’கியூபா லிபர்’ (Cuba libre) - 120 நிமிடங்கள் - ஜூன் 7, மாலை 6

3. ’வித் யூ பிரெட் அண்டு ஆனியன்ஸ்' (With you bread and onions) – 80 நிமிடங்கள் - ஜூன் 8, மாலை 6

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in