'இந்த கிரகத்தில் எளிமையான மனிதர்'... நடிகர் ரஜினியைப் புகழ்ந்த இர்பான் பதான்!

நடிகர் ரஜினியுன் இர்பான் பதான்.
நடிகர் ரஜினியுன் இர்பான் பதான்.

நடிகர் ரஜினிகாந்தை கிரிக்கெட்டர் இர்பான் பதான் சந்தித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 13வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 22வது லீக் போட்டி நேற்று நடந்தது.

ரஜினியுடன் இர்பான்...
ரஜினியுடன் இர்பான்...

இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது. அந்த வகையில், இந்தியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இர்பான் பதான் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, 'நம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் இவர். ஆனால், இந்த கிரகத்தில் எளிமையான மனிதர். அவரை சந்தித்தது ஒரு சிறந்த கற்றல் அனுபவம். மகிழ்ச்சி!' என்று பதிவிட்டுள்ளார்.

'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'தலைவர்170' என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று விஜயதசமியை முன்னிட்டு ரஜினிகாந்த் சென்னை வந்துள்ளார். அப்போது தான் இர்பான் பதான் அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in