தோனி தயாரிக்கும் புதிய படம் அறிவிப்பு: கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்

கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்
கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்தோனி தயாரிக்கும் புதிய படம் அறிவிப்பு: கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் தோனி தமிழில் தான் தயாரிக்க இருக்கும் புதிய படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கிரிக்கெட் வீரர் தோனி தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தமிழில் படங்கள் தயாரிக்க ஆர்வம் இருப்பதைத் தெரிவித்து இருந்தார். இப்பொழுது தோனி தமிழில் தயாரிக்க இருக்கும் முதல் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், எதிர்பார்த்தது போலவே நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்
கதாநாயகன் 'பிக்பாஸ்' ஹரிஷ் கல்யாண்

’லவ் டுடே’ படப்புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இவர்களுடன் நடிகர்கள் யோகிபாபு, நதியா, வினோதினி உள்ளிட்டோரும் நடிக்க இருக்கிறார்கள். படத்தின் தலைப்பாக ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெயினராக உருவாக இருக்கும் இந்தக் கதையை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். படத்திற்கு இசை விஷ்வஜித். படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in