பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்: காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்: காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் விளக்கம் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழ் பிக்பாஸைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் தனது ஆறாவது சீசனைத் தொடங்கி இருக்கிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு சீர்கேடாக அமைந்து, இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறது எனவும் இதனால், நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான நாகர்ஜூனா, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in