அவதூறு வழக்கு: சல்மான் கான் மனு நிராகரிப்பு

சல்மான் கான்
சல்மான் கான்

அவதூறு வழக்கில், பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

நடிகர் சல்மான் கான், மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பன்வல் பகுதியில் பண்ணை வீடு உள்ளது. இதற்கு அருகில் கேதன் கக்கட் என்பவருக்கான பண்ணை வீடு உள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கக்கட் அளித்த பேட்டியில், நடிகர் சல்மான் கான் பற்றியும் அவரது பண்ணை வீடு பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்தார். சல்மான் பற்றி மோசமான தகவல்களை அவர் அதில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்தப் பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நடிகர் சல்மான் கான், கக்கட்டுக்கு எதிராக மும்பை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தனது பண்ணை வீட்டைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட கக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் பேஸ்புக், யூடியூப், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட தளங்களில் அவருடைய அந்தப் பேட்டியை உடனடியாக நீக்க உத்தர வேண்டும் என்றும் அதில் கோரி இருந்தார். அதோடு இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், கக்கட் இனி தன்னைப் பற்றியும் பண்ணை வீடு பற்றியும் எந்தப் பேட்டியையும் கொடுக்க இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டது. அதோடு, இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கக்கட்டுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜன.21-க்கு தள்ளி வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in