சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை வெளியிடக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு

சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை வெளியிடக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு

சத்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம் இன்று (டிச.24) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால், சொன்னபடி இத்திரைப்படம் வெளியாகவில்லை. இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை உத்தரவு அளித்ததன் காரணமாக, இத்திரைப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீரன் என்பவர் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், சட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படத்தை சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் தனது ‘ஹனிபீ கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளில் ‘இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனமும் இணைந்து, இணை தயாரிப்பாக இத்திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்துள்ளார்கள். அந்நிறுவனத்தின் உரிமையாளர் கே.கே.சுதாகரன் பேசுகையில், “நாங்கள்தான் அதிகப் பணத்தை இத்திரைப்படத்தில் முதலீடு செய்துள்ளோம். ஒருகட்டத்தில் எங்கள் நிறுவனமான ‘இன்பினிட்டி பிரேம்ஸ்’ என்ற பெயரை எங்கும் பயன்படுத்தாமல், சஜீவ் தனது நிறுவனத்தின் பெயரை மட்டுமே படம் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் வியாபாரத்தில் பயன்படுத்தியிருக்கிறார்” என்றார்.

இதுகுறித்து சுதாகரன் சஜீவ்வுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், சுதாகரன் ஆலப்புழாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, படத்தைத் திரையரங்கு, ஓடிடி உட்பட எந்த வகையிலும் திரையிடக் கூடாது எனத் தடை வாங்கியிருக்கிறார்.

Related Stories

No stories found.