மோசடிப் புகாரில் சிக்கிய நடிகை வெளிநாடு செல்ல அனுமதி

மோசடிப் புகாரில் சிக்கிய நடிகை வெளிநாடு செல்ல அனுமதி

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருது (IIFA) விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் 15 நாட்களுக்கு பயண தடையை தற்காலிகமாக விலக்க வேண்டும் என்றும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையைத் தள்ளி வைத்தது.

இதற்கிடையே, விருது நிகழ்ச்சி தேதி மாற்றப்பட்டதாகக் கூறி, தாக்கல் செய்திருந்த மனுவை ஜாக்குலின் திரும்பப் பெற்றார். இந்நிலையில், இந்த விருது விழாவில் நடிகை ஜாக்குலின் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மே 31-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அவர் கலந்துகொள்ளலாம். அதுவரை அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பர்வீன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.50 லட்சம் வைப்புத்தொகைக்கான ரசீது, ரூ.50 லட்சத்துக்கான ஜாமீன், அவருடைய பயண விவரங்கள், தங்கியிருக்கும் இடம், அபுதாபியில் இருந்து இந்தியா திரும்பும் தேதி உள்ளிட்ட விவரங் களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நாடு திரும்பியதும் அந்தத் தகவலை அமலாக்கத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in