`நீங்கள் கஸ்தூரி ராஜா மகனே கிடையாது'- 10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷுக்கு தம்பதி அதிரடி பதில்!

`நீங்கள் கஸ்தூரி ராஜா மகனே கிடையாது'- 10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷுக்கு தம்பதி அதிரடி பதில்!

10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷுக்கு, மகன் உரிமை கோரி வரும் மேலூர் தம்பதி அதிரடியாக பதில் அளித்துள்ளது.

நடிகர் தனுஷை தங்களோட மகன் என்றும் அவர் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார் என்றும் அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி உண்மை தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்று மதுரை தம்பதியினர் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தங்களைக் கொலை செய்ய இயக்குநர் கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக கதிரேசன் தம்பதியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் 10 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தனுஷின் நோட்டீசுக்கு தற்போது கதிரேசன் தம்பதி பதில் அளித்துள்ளது. அதில், "தங்களின் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். தாங்கள் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 28.7.1983ல் பிறந்தீர்கள் என்பது தவறு. இந்த விவகாரத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். தாங்கள் என்னுடைய மகன் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இதற்காக 10 கோடி கேட்டு தாங்கள் அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் தொடரும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in