`லியோ’வில் அந்த விஷயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது... ஆடை வடிவமைப்பாளர் சத்யா

ஆடை வடிவமைப்பாளர் சத்யா
ஆடை வடிவமைப்பாளர் சத்யா

நடிகர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்ட சத்யா தனது சினிமா பயண அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமல்லாது, நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் குறித்தும் இதில் பேசியுள்ளார்.

நடிகரும் ஆடை வடிவமைப்பாளருமான சத்யா காமதேனுவுடனான நேர்காணலில் பேசியிருப்பதாவது, “நான் விஜய் சாருக்கு காஸ்ட்யூம் செய்ய வேண்டும் என்றுதான் இந்தத் துறைக்கே வந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. ‘தெறி’ சக்சஸ் மீட்டில் விஜய் சார் பாட்டுக்கு பயங்கரமாக டான்ஸ் ஆடினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் என்னிடம் வந்து, ‘உண்மைய சொல்லு, நீ நடிக்கதான இந்த ஃபீல்டுக்கு வந்த’ என்று சொல்லி என் நடிப்பு ஆசையைத் தூண்டிவிட்டார்” என்றார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சத்யா ‘லியோ’ படத்தில் விஜய் பேசிய தகாத வார்த்தைகள், அதிக அளவிலான வன்முறை போன்றவை சர்ச்சையானது குறித்தும் பகிர்ந்து கொண்டார், “லியோ படத்தின் அப்டேட்டை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்து கொண்டுதான் இருக்கிறேன். டிரெய்லரும் பார்த்தேன். இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான விஜய் சாரை இதில் பார்க்கிறேன். குறிப்பாக அவர் கெட்டவார்த்தைகள் பேசினது எல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், படம் பார்த்த பின்புதான் அது எந்த அளவுக்கு கதையோடு சரியாகப் பொருந்தியுள்ளது என்பது தெரியும்” என்றார்.

இதுமட்டுமல்லாது, சமீபத்தில் வெளியான அவரது ‘மார்க் ஆண்டனி’ படம் குறித்தும், ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கும் மொத்தப் படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியது குறித்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஆடை வடிவமைப்பாளர் சத்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in