நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா!

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி 17-ம் தேதி திடீரென அறிவித்தார். “கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்துசெல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்” என்று தனுஷ் கூறியிருந்தார். இதேபோல் ஐஸ்வர்யாவும் அறிவித்திருந்தார்.

இந்தச் செய்தி தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, ரஜினியையும் அதிர்ச்சியடைய வைத்தது. தற்போது, இரண்டு பேரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள ஐஸ்வர்யா, சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்" என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in