
தனது கதையை காப்பியடித்து படமாக எடுத்துள்ளதாக எழுத்தாளர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வருண் தாவன், கியாரா அத்வானி, அனில் கபூர், நீது கபூர் உட்பட பலர் நடித்துள்ள படம், ஜக்ஜக் ஜீயோ (Jugjugg Jeeyo). ராஜ் மெஹ்தா இயக்கியுள்ள இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஞ்சியை சேர்ந்த விஷால் சிங் என்ற எழுத்தாளர், இந்தப் படம் தனது பன்னி ராணி என்ற கதையை தழுவி தனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் இழப்பீடாக ரூ.1.5 கோடி வழங்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம், படத்தைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற திரையிடலுக்குப் பிறகு இரண்டு கதைகளும் ஒன்றுதானா என்பதை நீதிபதி முடிவு செய்ய இருக்கிறார்.