கதை இதுதான்: பிரபல இயக்குநருடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின்!

கதை இதுதான்: பிரபல இயக்குநருடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஷ்வினின் அடுத்த படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். இதற்கு முன்பு ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியே அவரை பலருக்கும் கொண்டு போய் சேர்த்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது திரைப்படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதற்கு முன்பு இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஷ்வினின் பேச்சும் வைரலானது. இப்போது அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. `மைனா’, ‘கும்கி’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமனுடன் தான் அஷ்வின் அடுத்த படம் நடிக்க உள்ளார். இந்த படத்தினை Trident Arts நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கிறது.

படத்தின் கதை முழுவதுமே பேருந்துக்குள் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகைச்சுவை நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பேருந்தின் நடத்துநர் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார். பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு வரும் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in