சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டி?: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டி?: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஷால் நடித்துள்ள படம் 'லத்தி'. வினோத் குமார் இயக்கியுள்ள இப்படம் டிச.22-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பதியில் உள்ள மூன்று தனியார் கல்லூரிகளில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுடன் நடிகர் விஷால் கலந்துரையாடினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " 'லத்தி' திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் டிக்கெட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளின் நலனுக்காக செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சந்திரபாபு நாடுயுடுவின் குப்பம் தொகுதி மகக்ள் மீது இருக்கும் அன்பு காரணமாக அந்த தொகுதியில் சில வளர்ச்சி பணிகளைச் செய்தேன்.

ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் இல்லை. நடிகர் சங்க கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும். அதன் பின் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in