`என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்'- வைரலாகும் தனுஷின் ட்வீட்

`என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்'- வைரலாகும் தனுஷின் ட்வீட்

கரோனாவில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனி இசைப்பாடல் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த பாடல் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் பாடல் ஹிட்டாக வேண்டுமென ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் தனுஷ் ட்விட்டர் மூலம் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். அதில், ”மியூசிக் வீடியோ வெளியானதற்கு என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in