தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர இப்படி செய்யலாமே?: இயக்குநர் தங்கர்பச்சான் சொல்லும் ஐடியா

தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர இப்படி செய்யலாமே?: இயக்குநர் தங்கர்பச்சான் சொல்லும் ஐடியா

அரசு பள்ளிகளில் படிப்போருக்கு மட்டும் சலுகைகள்
என அரசு அறிவித்தால் தான் அரசு பள்ளிகளின் தரம் உயருமென திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.


தமிழின் பிரபல இயக்குநரான தங்கர்பச்சான் இயக்கத்தில் வீரசக்தி தயாரிப்பில் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை அதிதி மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தங்கர்பச்சான் செய்தியாளர்களிடம் கூறுகையி,ல, தமிழக அரசு சார்பில் நம்ம ஸ்கூல் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நன்கு செயல்படுத்த செல்வந்தர்கள்  நிதி அளிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. செல்வந்தர்களிடம் பணத்தை பெற்று திட்டத்தை செயல்படுத்தினால் இத்திட்டம் முழு வெற்றி அடையாது.   கூலித்தொழிலாளி கூட தனது பிள்ளையைத் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் தங்கள்  குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. இதே நிலை அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் உடல் நலக்குறைவு ஏற்படும்போது தனியார் மருத்துவமனைகளை தான் நாடுகின்றனர். இத்தகைய மனநிலை இருக்கும்போது அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை எப்படி கிடைக்கும்?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வியின் தரம் உயரவும், அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கவும், அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே உயர் கல்வியில் இடம், அரசு வேலை, இட ஒதுக்கீடு என அரசு தீர்க்கமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in