பெண்களை தவறாக சித்தரிப்பதா? இயக்குநர் மீது வழக்கு

மகேஷ் மஞ்சரேகர்
மகேஷ் மஞ்சரேகர்

பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆட்சேபத்துக்குரிய வகையில் சித்தரித்துள்ளதாகக் கூறி, இயக்குநரும் நடிகருமான மகேஷ் மஞ்சரேகர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில், அஜித்தின் ’ஆரம்பம்’, சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகர் மகேஷ் மஞ்சரேகர். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர், தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவர் மகள், பிரபல இந்தி நடிகை சாயி மஞ்சரேகர்.

மகேஷ் மஞ்சரேகர், ’நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ (Nay Varan Bhat Loncha Kon Nay Koncha) என்ற மராத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர், கடந்த 10-ம் தேதி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுவர்களை ஆட்சேபத்துக்குரிய வகையில் சித்தரித்துள்ளதாகக் கூறி இயக்குநரும் நடிகருமான மகேஷ் மஞ்சரேகர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மகேஷ் மஞ்சரேகர்
மகேஷ் மஞ்சரேகர்

பெண்கள் குறித்து ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான காட்சிகள் இருப்பதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களை தவறான கண்ணோட்டத்தில் இந்த டிரெய்லர் சித்தரிப்பதாகவும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மகளிர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து டிரெய்லர் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. படத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆட்சேபத்துக்குரிய வகையில் சித்தரித்துள்ளதாகக் கூறி, ஷத்திரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பு பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இயக்குநர் மகேஷ் மஞ்சரேகர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in