சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்?

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

யூடியூப்பர் சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' ஆகிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இவர் இயக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் கதை, 'விடுதலை' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் கதைநாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுதவிர சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படத்தை அவர் எடுக்கிறார்.கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதுதவிர 'வடசென்னை 2' மற்றும் வெப் தொடர் ஒன்றையும் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த நிலையில், அரசியல் விமர்சரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கரின் வாழ்க்கைக் கதையைப் படமாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். சவுக்கு சங்கர் கதையை இயக்க ஒரு பெண் இயக்குநர் திட்டமிட்டதாகவும், அது காலதாமதமானதால், தற்போது வெற்றிமாறன் அந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையொட்டி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது கடலூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in