நயன்தாராவுடன் ஒப்பீடு: முதல் முறையாக மனம் திறந்த த்ரிஷா!

த்ரிஷா
த்ரிஷா

நயன்தாராவுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து நடிகை த்ரிஷா முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

’ஜோடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விஜய்சேதுபதி என தமிழ் சினிமாவின் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்து 20 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார் நடிகை த்ரிஷா. இந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்1’ படத்திற்குப் பிறகு ‘ராங்கி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருபது வருடங்கள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்து அவருக்கான பட்டம் குறித்தும், நயன்தாராவை த்ரிஷாவுடன் ஒப்பிடுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு த்ரிஷா பதில் கூறும்போது, ‘நயன்தாராவுடன் என்னை ஒப்பிடுவதை உண்மையில் நான் வரவேற்கிறேன். அது ஆரோக்கியமான விஷயம்தான். நாங்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில்தான் நடிப்பைத் தொடங்கினோம். இரண்டு பேரும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளோம். எங்கள் ஒப்பீடு பாசிட்டிவான முறையில் சென்றால் அது மகிழ்ச்சி. முதலில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவுக்கு பதில் என்னைத்தான் விக்னேஷ்சிவன் கூப்பிட்டார். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அது குறித்தும் வருத்தமும் இல்லை’ எனத் தெரிவித்தார் த்ரிஷா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in