பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக அவரது சொந்த ஊரில் உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயண மூர்த்தி(67). அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இயக்குநர் விசுவால் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவ நாராயணமூர்த்தி, 'பூந்தோட்டம்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தன்னுடைய உடல் அமைப்பு காரணமாகப் பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் படத்திலும் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடனும் சேர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவநாராயண மூர்த்தி படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சொந்த ஊரான புதுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்குச் செல்வது வழக்கம்.  குடும்பத்தினருடன் சொந்த கிராமத்தில் தங்கியிருந்த சிவநாராயணமூர்த்தி நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணிக்குச் சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in