வடிவேலுவுடன் கலக்கி வந்த பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி!

வடிவேலுவுடன் கலக்கி வந்த பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘நீ மட்டும்’ என்ற படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் வெங்கல் ராவ். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ், சினிமா வாழ்க்கையில் 25 வருடமாக சண்டை பயிற்சியாளராக இருந்தவர். பின்னர் உடல் ஒத்துழைக்காததால் நடிக்க வந்துவிட்டார். வடிவேலு படங்களில் நடிக்காமல் போனதில் இருந்து அவருடன் நடித்த பல நடிகர்களும் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். அந்த வகையில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருபவர் வெங்கல் ராவ்.

பிறகு சமீபகாலமாக இவர் படங்களில் நடக்கவில்லை. இந்நிலையில் வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "வடிவேல் அண்ணா இல்லை என்றால் நான் இங்கு இப்ப இந்த நிமிடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரும் உதவி செய்தவர் வடிவேல் அண்ணா" என்று உருக்கமாக கூறியிருந்தார் வெங்கல் ராவ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in