பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.

இதனிடையே, அவர் உயிரிழந்துவிட்டதாக கடந்த 2-ம் தேதி வதந்தி பரவியது. இதையடுத்து, ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் தீப் ஸ்ரீவஸ்தவா தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, மரணம் குறித்த வதந்தியை மறுத்தார். “அவர் ஒரு போராளி, விரைவில் போரில் வென்று திரும்பி வருவார். தனது நகைச்சுவையால் அனைவரையும் மகிழ்விப்பார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீவஸ்தவா சிறு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் இன்னும் வென்டிலேட்டரில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு திரைவுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in