ஐசியுவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் அனுமதி!

ஐசியுவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் அனுமதி!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் காமெடி நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டா மணி. 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல கலக்கலான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியுள்ளார். இலங்கையை சேர்ந்த போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். சினிமாவிற்கு வாய்ப்பு தேடும்போது போண்டா மணி, தண்ணீரை குடித்தே பசியாற்றிக் கொள்வாராம். இதனை அறிந்த இயக்குநர் வி.சேகர், கேதீஸ்வரன் என்ற பெயரை போண்டா மணி என்று மாற்றியமைத்துள்ளார். இவருடன் 16 பேர் பிறந்த நிலையில் அவர்களில் 8 பேர் இலங்கையில் கலவரத்தின்போது உயிரிழந்தனர்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக போண்டா மணி பாண்டிபஜாரில் வாட்ச் மேன் பணியில் சிறிது காலம் இருந்துள்ளார். வடிவேலு உடன் இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ், வின்னர், மருதமலை படங்கள் போண்டா மணிக்கு புகழை தேடித் தந்தன. குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

இந்நிலையில் இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in