தஞ்சைக்கு வருவாயா வந்தியத்தேவா... அருண்மொழியையும் இழுத்துவா! - விக்ரமின் வேற லெவல் ட்வீட்

தஞ்சைக்கு வருவாயா வந்தியத்தேவா... அருண்மொழியையும் இழுத்துவா! - விக்ரமின் வேற லெவல் ட்வீட்

பெருவுடையாரின் ஆசி பெறுவதற்காக தஞ்சைக்கு வருவதாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த அப்டேட்கள் தினமும் வரிசைகட்டி வந்து பரபரபூட்டுகின்றன. இந்த நிலையில் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழனின் வாழ்க்கை வரலாற்றினை கற்பனையுடன் கலந்து பொன்னியின் செல்வன் நாவலாக கல்கி படைத்திருந்தார். இதனை தற்போது மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று திரைப்படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in