
திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் பாரம்பரிய உடை அணிந்து வாருங்கள் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இவர்கள் இருவரும் நேற்று வெளியிட்டனர்.
இந்த திருமணம் முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் சென்னையில் உள்ள மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிகை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமணம் நடக்கம் நேரம், இடம் ஆகியவற்றுடன் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கான ட்ரெஸ்கோடு அறிவிக்ககப்பட்டுள்ளது. அதில் விருந்தினர்கள் பாரம்பரிய உடைதான் (Ethnic pastels) அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.