ஒருநாளைக்கு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின்- ரஜினிகாந்த்
முதல்வர் ஸ்டாலின்- ரஜினிகாந்த் ஒருநாளைக்கு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் வர உள்ள நிலையில், ஒரு நாளைக்கு முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி திமுகவினர் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க தயாராகி வருகின்றனர். முதல்வர் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அவரது புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் வர உள்ள நிலையில், ஒரு நாளைக்கு முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசும் ரஜினிகாந்த்த, "என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70-வது பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in