பெரிய திரையைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் போட்டி: பிப்.10-ம் தேதி ஓடிடியில் 'வாரிசு', 'துணிவு'

பெரிய திரையைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் போட்டி: பிப்.10-ம் தேதி ஓடிடியில் 'வாரிசு', 'துணிவு'

பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாளில் வெளியான நடிகர் அஜித் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய படங்கள் பிப்.10 -ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வசூல் சாதனை செய்வதில் இந்த இரண்டு படங்களுக்கும் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஓடிடி தளத்தில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 65 கோடி ரூபாய் கொடுத்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதே போல நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 75 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களும் பிப்.10-ம் தேதி ஒரே நாளில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in