படம் இயக்குவது என் வேலை இல்லை: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பளிச் பதில்

படம் இயக்குவது என் வேலை இல்லை: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பளிச் பதில்

இயக்குநராக தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். 'மெளனராகம்',' நாயகன்', 'தேவர் மகன்', 'அலைபாயுதே' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள இவர் 'மீரா', 'குருதிப்புனல்', 'வானம் வசப்படும்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இப்போது விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராசி கண்ணா நடித்துள்ள ’தேங்யூ’ என்ற தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பி.சி.ஸ்ரீராம் கூறும்போது, ‘’சமூகத்தில் மனித நேயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒருவரோடு ஒருவர் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்கள். நன்றியையும் மறந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் ’தேங்யூ’ போன்ற ஒரு படம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோது, கதையோடு ஒன்றிப் போனேன்’’என்றார்.

அவரிடம், மீண்டும் படம் இயக்குவீர்களா? என்று கேட்டபோது, ”டைரக்‌ஷன், ஒளிப்பதிவு இரண்டு வேறு துறை. இந்த துறைகளின் வேலை முறை மாறிவிட்டது. படம் இயக்குவது என் வேலை இல்லை என்று புரிந்துகொண்டேன். நான் இயக்கிய படங்கள் மூலம், இயக்குநராக என்னால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் மீண்டும் படம் இயக்கும் எண்ணமில்லை ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in