பிரபல தயாரிப்பாளர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல தயாரிப்பாளர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான அட்லஸ் ராமச்சந்திரன் (80) கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அட்லஸ் ஜூவல்லரி என்ற நகைக்கடையை  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பல வருடங்களாக நடத்தி வந்துள்ளார்.  மேலும் இவர் பல மலையாளத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் உருவான பல படங்கள் மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவரின் தயாரிப்பில் மம்மூட்டி, மோகன்லால் உட்படப் பல பிரபல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அட்லஸ் ராமச்சந்திரன்  மறைவை அவரின் குடும்பத்தினர்கள் உறுதி செய்துள்ளனர். சிகிச்சையில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அட்லஸ் ராமச்சந்திரன்  மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in