தனுஷூடன் பழகி விவாகரத்துப் பெற்ற பிரபலங்கள் இத்தனை பேரா... தீயாய் பரவும் தகவல்!

தனுஷூடன் பழகி விவாகரத்துப் பெற்ற பிரபலங்கள் இத்தனை பேரா... தீயாய் பரவும் தகவல்!

சமீபமாக திரையுலகில் அடுத்தடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்ட பல பிரபலங்களின் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஆனால், உற்று கவனித்தால் இவர்கள் அத்தனைப் பேரின் விவாகரத்து செய்திகளிலும் நடிகர் தனுஷின் பெயர் அடிபடுவதைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோடிட்டு காட்டுகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் தனுஷூடன் தற்போது நெருங்கி பழகி வரும் நிலையில், அவரது விவாகரத்து செய்தியையும் தனுஷின் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

திரையுலகில் அமலாபால், செளந்தர்யா ரஜினி, சமந்தா, தனுஷ், டி.இமான், இப்போது ஜிவி பிரகாஷ் என அடுத்தடுத்துப் பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்தியை அறிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளான அதேசமயம் ஒவ்வொரு விவாகரத்து செய்திகளுக்குப் பின்னாலும் நடிகர் தனுஷ் பெயர் தவறாமல் இடம் பெறுவது ஆச்சரியத் தகவல்.

விஜய்- அமலாபால்
விஜய்- அமலாபால்

நடிகை அமலாபால் இயக்குநர் விஜயுடன் திருமண உறவை முறித்துக் கொண்டார். இதற்குக் காரணம் தனுஷ் என்று சொல்லப்பட்டது. ‘வேலையில்லா பட்டதாரி’ பட சமயத்தில் தனுஷூடன் அமலாபால் நெருங்கிப் பழகியதே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது. அதேபோல, ‘வேலையில்லா பட்டதாரி2’ படத்தை இயக்கிய தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் சகோதரி செளந்தர்யாவும் அவரது முதல் கணவரை விவாகரத்து செய்தார். இந்த விஷயத்திலும் தனுஷ் பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம்.

இதேபோல, தனுஷின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களில் பின்னணிப் பாடகர் யேசுதாஸூம் ஒருவர். இவரது மகளும், தனுஷ் மகன்களும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். மேலும், தனுஷின் ‘மாரி’ படத்திலும் யேசுதாஸ் நடித்திருந்தார். இவரும் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதற்கும் தனுஷ் தான் காரணம் என சொல்லப்பட்டது.

ஜிவி பிரகாஷ்- சைந்தவி
ஜிவி பிரகாஷ்- சைந்தவி

இவர்களைப் போலவே தனுஷூடன் நெருங்கிய நட்பு கொண்டவர் தொகுப்பாளினி டிடி. இவரும் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு சிங்கிளாக இருக்கிறார். இவர்களுடன் ஜிவி பிரகாஷூம் தனது விவாகரத்தை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் விவாகரத்தை அறிவித்த அதே சமயத்தில்தான், பாடகி சுசித்ரா தனுஷ் தான், பிரபலங்களின் ப்ரைவேட் படங்கள் லீக்கானதற்கு காரணம் என்று பகீர் கிளப்பினார். மேலும், அவருக்கென்று ஒரு வட்டம் உள்ளது எனவும் கூறினார்.

நாகசைதன்யா- சமந்தா
நாகசைதன்யா- சமந்தா

மேலே சொன்னவர்களோடு தனுஷின் நட்பு வட்டத்தில் இருந்த நடிகை சமந்தா, யுவன் சங்கர் ராஜா என இவர்களும் விவாகரத்து செய்தனர். இந்த விஷயத்தை எல்லாம் சேர்த்து வைத்துப் பார்த்த நெட்டிசன்கள் தனுஷை ‘டிவோர்ஸ் எக்ஸ்பெர்ட்’ என கூறிவருகின்றனர். இப்படி எல்லோரையும் விவாகரத்து வரைக்கும் கொண்டு சென்ற தனுஷே தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டார் என்றும் சொல்கின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in