சிஐடி இன்ஸ்பெக்டராக வரும் பிரபல சின்னத்திரை நடிகரிடம் கொள்ளை!

சிஐடி இன்ஸ்பெக்டராக வரும் பிரபல சின்னத்திரை நடிகரிடம் கொள்ளை!

சின்னத்திரை தொடரில் சிஐடி இன்ஸ்பெக்டராக நடித்தவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் ரிஷிகேஷ் பாண்டே. இந்தில் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். ’சிஐடி’ என்ற தொடரில் இன்ஸ்பெக்டர் சச்சின் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் இவர். இவர் தனது குடும்பத்துடன், மும்பை துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள எலிபெண்டா குகைகளைப் பார்க்கச் சென்றார்.

சுற்றிப்பார்த்துவிட்டு குளிர்சாதன பேருந்தில் கொலபாவில் இருந்து டார்டியோவுக்கு சென்றுகொண்டிருந்தார் பாண்டே. பின்னர் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவர் வைத்திருந்த பையைக் காணவில்லை. அதில் ரொக்கம், கிரெடிட் கார்டுகள், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் அவரது காருக்கான ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்தது. தனது கைப்பையை யாரோ கொள்ளையடித்துச் சென்றது குறித்து கொலபா, மற்றும் மலாடு காவல் நிலையங்களில் புகார் அளித்தார் பாண்டே. போலீஸார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி ரிஷிகேஷ் பாண்டே கூறும்போது, “சிஐடி தொடரில் இன்ஸ்பெக்டராக நடித்ததால், நிஜ வாழ்க்கையில் மக்கள் என்னிடம் பிரச்சினைகளுடன் வருவார்கள். அவர்களுக்கு தீர்வு சொல்வேன். அப்படிப்பட்ட என்னிடமே இப்போது கொள்ளை நடந்திருப்பதை நினைத்தால் சிரிக்கத்தான் வேண்டி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in