ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடன இயக்குநர்!

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடன இயக்குநர்!

பிரபல நடன இயக்குநர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.

தனுஷின் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ’ரவுடி பேபி’, சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் ’காந்த கண்ணழகி’, ’பட்டாஸ்’ படத்தின் ’ஜில் பிரோ’, ’டாக்டர்’ படத்தின் ’செல்லம்மா செல்லம்மா’, ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் ’மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ உட்பட பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.

தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இவர் நடனம் அமைத்த ’புட்ட பொம்மா’ பாடலும் சூப்பர் ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு நடனம் அமைத்து வரும் இவர் இப்போது ஹீரோவாகி இருக்கிறார்.

ஜானி மாஸ்டர், சிருஷ்டி வர்மா
ஜானி மாஸ்டர், சிருஷ்டி வர்மா

இவர் நடிக்கும் படத்துக்கு, ’யதா ராஜா டதா பிரஜா’ (Yatha Raja Tatha Praja) என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் ’சினிமா பண்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த விகாஸ் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். சிருஷ்டி வர்மா நாயகி. அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டாலா எழுதி இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகிறது.

ஒம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ரதன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. நடிகர் சர்வானந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in