உங்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி: சல்மானை வரவேற்ற சிரஞ்சீவி

சல்மான் கானை வரவேற்கும் சிரஞ்சீவி
சல்மான் கானை வரவேற்கும் சிரஞ்சீவி

’உங்களுடன் நடிப்பதில் முழுமையாக மகிழ்கிறேன்’ என்று சல்மான் கானை வரவேற்று நடிகர் சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்போது காட்ஃபாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக். மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா, சத்யதேவ், நாசர், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கான் நடிக்கிறார். லூசிஃபர் படத்தில் பிருத்விராஜ் நடித்த கேரக்டரில் சல்மான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சல்மான் கானும் சிரஞ்சீவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதில் நடிக்க அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்காக மும்பை புறநகர் பகுதியில் சிறப்பு செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருவரும் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் சல்மான் கானை படப்பிடிப்புக்கு வரவேற்று நடிகர் சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

அதில், ’காட்ஃபாதர் டீமுக்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் வருகை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அடுத்த லெவலுக்கு எங்களை கொண்டு சென்றிருக்கிறது. உங்களுடன் படத்தின் நடிப்பதில் முழுமையாக மகிழ்கிறேன். இந்தப் படத்தில் நீங்கள் இருப்பது ரசிகர்களுக்கு மேஜிக்கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in