`கோடிகளை சம்பளமாக வாங்கிவிட்டு எப்படி தொழிலாளி ஆனார்?'- சூப்பர் ஸ்டாரை விளாசும் வில்லன் நடிகர்!

`கோடிகளை சம்பளமாக வாங்கிவிட்டு எப்படி தொழிலாளி ஆனார்?'- சூப்பர் ஸ்டாரை விளாசும் வில்லன் நடிகர்!

சினிமா தொழிலாளர்களுக்குத் தேவையற்ற வாக்குறுதிகளை தர வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் நடிகை பிரபல வில்லன் நடிகர் விளாசியுள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கு நடிகரான இவர், தமிழில், சாமி, திருப்பாச்சி, கொக்கி, சத்யம், சகுனி, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் நடத்திய விழாவில் கலந்துகொண்டார், மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அப்போது பேசிய அவர், சினிமா தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்ட இருக்கிறேன் என்று அறிவித்தார்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ``சினிமா தொழிலாளர்கள் மூன்று வேளை உணவுக்கு கஷ்டப்படும்போது, மருத்துவமனைக் கட்டுவது பற்றி நடிகர் சிரஞ்சீவி பேசுகிறார். தேவையில்லாத வாக்குறுதிகளை விட அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதும் அவர்களுக்கு வழி காட்டுவதும்தான் முக்கியம். தான் சினிமா தயாரிப்பாளர் அல்ல, தொழிலாளிதான் என்றும் சொல்கிறார் சிரஞ்சீவி. கோடிகளைச் சம்பளமாக வாங்கும் அவர் எப்படி தொழிலாளி ஆனார்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.

இவருடைய இந்தப் பேட்டி தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in