‘விக்ரம் என்னவொரு த்ரில்லான படம்!’ - விருந்து வைத்து கமலைப் பாராட்டிய சிரஞ்சீவி

 ‘விக்ரம் என்னவொரு த்ரில்லான படம்!’ - விருந்து வைத்து கமலைப் பாராட்டிய சிரஞ்சீவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத், நரேன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கடந்த 3-ம் தேதி ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வெற்றியடைந்திருக்கிறது. இந்தப் படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மற்ற மொழிகளிலும் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவர் குழுவுக்கும் நடிகர் சிரஞ்சீவி அவர் வீட்டில் நேற்றிரவு விருந்து வைத்தார். ‘கபி ஈத் கபி தீவாளி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ஹைதராபாத் சென்றுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானும் அந்த விருந்தில் கலந்துகொண்டார். இருவரும் ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்காக நடிகர் கமல்ஹாசனைப் பாராட்டி, சிரஞ்சீவி சால்வை அணிவித்தனர்.

இதுபற்றி ட்வீட் செய்திருக்கும் நடிகர் சிரஞ்சீவி, ‘விக்ரம் பட வெற்றிக்காக என் பழைய நண்பரை, சல்மான் கானுடன் கொண்டாடி கவுரவிக்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அவர் குழுவும் என் வீட்டில் நேற்று இருந்தனர். விக்ரம் என்னவொரு த்ரில்லான படம். வாழ்த்துகள் நண்பரே’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in