எனக்கு புற்றுநோயா?- நடிகர் சிரஞ்சீவி ஆவேசத்துடன் விளக்கம்

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி

தனக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்திக்கு நடிகர் சிரஞ்சீவி விளக்கம் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு புற்றுநோய் எனவும் அதற்கான சிகிச்சை எடுத்து தற்போது நலமுடன் உள்ளார் எனவும் செய்திகள் வந்து வண்ணம் இருந்தது. இதற்கு விளக்கம் தெரிவித்தும் தவறான செய்தி பரப்பியதாக ஊடகங்கள் மீதும் நடிகர் சிரஞ்சீவி கடுமை காட்டியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிது காலத்திற்கு முன்பு, புற்றுநோய் மையத்தைத் திறந்து வைத்து, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால், புற்றுநோயைத் தடுக்கலாம் என்று சொன்னேன். நான் விழிப்புடன் இருப்பதற்காக ஒரு கொலோனோஸ்கோபி சோதனை செய்தேன். புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது என்றேன். ‘முதலில் பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால், அது புற்றுநோயாக மாறியிருக்கும்’ என்று மட்டும் சொன்னேன். அதனால்தான் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் மருத்துவ பரிசோதனைகள், ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதை சில ஊடக நிறுவனங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல், ‘எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது’, ‘சிகிச்சையால் உயிர் பிழைத்தேன்’ என்று செய்திகள் வெளியிட்டன. இதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனது உடல்நிலை குறித்து பல நலம் விரும்பிகள் செய்திகளை அனுப்பி வருகின்றனர். அதனால், உங்கள் அனைவருக்கும் மற்றும் இது போன்ற செய்திகளை பரப்பும் அத்தகைய பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். செய்தியின் பொருள் புரியாமல் முட்டாள்தனமாக எழுதாதீர்கள். இதனால், பலரும் அச்சம் மற்றும் வேதனை அடைந்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in