நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி காந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், `உங்களில் ஒருவன்' பாகம்1 என்ற தலைப்பில் தனது சுயசரிதை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியிட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க வரும்படி காங்கிரஸ் தலைவர் சாேனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலருக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறது திமுக. மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சுயசரிதை புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி காந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை ரஜினியிடம் பூச்சி முருகன் நேரில் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.