வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்து போன பாரதிராஜா

வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்து போன பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். முதல்வரின் இந்த திடீர் வருகையால் பாரதிராஜா நெகிழ்ந்து போனார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் . அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நான் விரைவில் மீண்டு வருவேன் என பாரதிராஜா அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் முன்பு பொது பிரிவிற்கு பாரதிராஜா மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுத்து வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். முதல்வரின் இந்த திடீர் வருகையால் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்துப் போனார்கள்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் கே.என்.நேரு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in